Published on 18/06/2021 | Edited on 18/06/2021

இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று (18.06.2021) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் தொடங்க இருக்கிறது. ஆனல் அங்கு தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் திட்டமிட்டபடி 3 மணிக்கு (இந்திய நேரப்படி) போட்டியைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மழை பாதிப்பு காரணமாக இன்றைய நாளின் முதல் பகுதியில் (first session) ஆட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு மழை சற்று ஓய்ந்ததால் இரண்டாவது செஸ்சன் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை காண ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.