Published on 26/09/2020 | Edited on 26/09/2020
![du Plessis](http://image.nakkheeran.in/cdn/farfuture/QznrmKn3tAP6-LWpKJoDSNbVbfVyvKd8JiAxiLeIAv8/1601099037/sites/default/files/inline-images/du-Plessis-final.jpg)
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் ஏழாவது நாளான நேற்று, சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. அதில், டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி வீரரான டு பிளஸிஸ் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். அதன் மூலம் ஐபிஎல் தொடரில் 2000 ரன்களைக் கடந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை வேகமாக எட்டிய நான்காவது வெளிநாட்டு வீரர் என்ற சாதனை, தற்போது டு பிளஸிஸ் வசமாகியுள்ளது. அவர் தனது 67-வது இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இப்பட்டியலில், முதல் மூன்று இடங்களில் முறையே கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ், வாட்சன் உள்ளனர். கிறிஸ் கெயில் 48 இன்னிங்ஸிலும், ஷான் மார்ஸ் 52 இன்னிங்ஸிலும், வாட்சன் 65 இன்னிங்ஸிலும் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.