Skip to main content

கேப்டனாக தோனி தொடர்வாரா? சென்னை அணியின் சி.இ.ஓ பதில்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

dhoni

 

அணி கேப்டனாக தோனி தொடர்வாரா என்ற கேள்விக்கு சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 -ஆவது ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி, தொடர் தோல்விகளால் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 4 வெற்றிகள், 8 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து, முதல் சுற்றிலேயே சென்னை அணி வெளியேறியது இதுவே முதல் முறை. தோனியின் ஆட்டம் மற்றும் அணியை வழிநடத்தும் திறன் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 

"அடுத்த ஆண்டும் தோனிதான் சென்னை அணியை வழிநடத்துவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சென்னை அணிக்காக இதுவரை மூன்று கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். முதல்முறையாக அடுத்த சுற்று வாய்ப்பிற்குத் தகுதி பெறாமல் வெளியேறுகிறோம். இதுவரை எந்தவொரு அணியும் இவ்வளவு சாதனை படைத்ததில்லை. ஒரு வருடம் மோசமாக அமையும் போது அனைத்தையும் மாற்றிவிட வேண்டும் என்ற அவசியமில்லை". இவ்வாறு காசி விஸ்வநாதன் கூறினார்.