சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா, சீனாவின் பெங் ஜோடி, சீனாவின் தைபேயின், ருமேனியாவின் மோனிகா ஜோடியை எதிர்கொண்டது. சிறப்பாக விளையாடிய தைபேயின் மோனிகா ஜோடி சானியா இணையை திணறடித்தது.
இறுதியில் 4-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் சானியா ஜோடி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.