Skip to main content

சென்னை அணிக்கு ஆதரவளிக்க சிறப்பு ரயிலில் புனே கிளம்பிய ரசிகர்கள்!

Published on 19/04/2018 | Edited on 19/04/2018

இரண்டு ஆண்டுகள் தடை நீங்கிய பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மீண்டும் களமிறங்கியது. சென்னை அணி மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடப்போகும் உற்சாகத்தில் இருக்க, காவிரி விவகாரம் தொடர்பாக போட்டி தினத்தன்று பல்வேறு அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

 

காவிரி தொடர்பான போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்திடும் கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடக்கவேண்டாம் என கூறியவர்கள், மைதானத்தில் காலணிகளை வீசி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 

 

இதையடுத்து, போட்டிகள் நடத்துவதை எதிர்த்து போராட்டங்கள் நடப்பதாலும், காவல்துறை பாதுகாப்பு அளிக்க மறுப்பதாலும் சென்னையில் நடக்கவிருக்கும் போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் 20ஆம் தேதி புனேவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. 

 

 

சென்னையில் நடக்கவில்லை என்றாலும், புனேவில் நடைபெறும் போட்டியை நேரில் சென்று ரசிக்கவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கவும் இன்று சென்னையில் இருந்து ரசிகர்கள் புனே கிளம்பினர். சென்னை கிரிக்கெட் சங்கம் மற்றும் சி.எஸ்.கே. ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயிலில் கிளம்பியுள்ள ரசிகர்கள், நாளை காலை 5.30 மணிக்கு புனே சென்றடைவார்கள்.