Skip to main content

சிங்கத்தைப் பசியுடன் வைத்திருப்பது முக்கியம் - வெற்றிக்குப் பின் கே.எல்.ராகுல் பேச்சு!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

kl rahul

 

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 31-வது லீக் போட்டியில், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் 7 போட்டிகளில் களமிறங்காத கெயில் நேற்றைய போட்டியில் களமிறங்கி, 45 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். வெற்றிக்குப் பின் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், கிறிஸ் கெயிலை வெகுவாகப் பாராட்டினார்.

 

அதில் அவர், "கெயில் எப்போது பேட் செய்தாலும், மிக ஆபத்தானவர். அவர் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். கடந்த 2 வாரமாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. முதல் நாளில் இருந்தே விளையாட வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்பட்டார். தீவிரமான வலைப்பயிற்சியில் இருந்தார். அவருக்கு விளையாட வாய்ப்பளிக்காமல் இருந்தது கடினமான முடிவு. சிங்கத்தைப் பசியுடன் வைத்திருப்பது முக்கியம்" எனக் கூறினார்.

 

பஞ்சாப் அணி, அடுத்த போட்டியில் மும்பை அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகிறது.