Skip to main content

ஐபிஎல் தொடர்: மும்மடங்கு தொகையை எதிர்பார்க்கும் பிசிசிஐ; முட்டி மோதவுள்ள  டிஸ்னி -சோனி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

ipl

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் 2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த ஏலம், மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தநிலையில் 2023 முதல் 2027 வரைக்குமான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை, 40 முதல் 45 ஆயிரம் கோடி வரை ஏலம் போகலாம் என பிசிசிஐ எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் நெட்வொர்க் 16, 347 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

 

ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற சோனி, டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க், ரிலையன்ஸ்-வயாகாம் 18, அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் காத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் கடந்தமுறையை விட மும்மடங்கு தொகையை பிசிசிஐ எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையில் பெரிய தொகையை முதலீடு செய்ய தயங்கமாட்டோம் என டிஸ்னி கூறியுள்ள நிலையில், சோனி நிறுவனமும் இந்த ஒளிபரப்பு உரிமையில் பெரிய தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த இரு நிறுவனங்களுக்குமிடையே ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும் என கருதப்படுகிறது.