Skip to main content

ஆண்டர்சனின் கருத்து குழந்தைத் தனமானது! : சிவராமகிருஷ்ணன் பதிலடி

Published on 25/07/2018 | Edited on 25/07/2018

கோலி குறித்த ஜேம்ஸ் ஆண்டர்சனின் கருத்து முற்றிலும் குழந்தைத் தனமானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 

Laxman

 

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை வென்றும், ஒருநாள் தொடரில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இதுகுறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, இந்திய அணி வெற்றிபெற்றால் போதுமே தவிர, அதில் நான் அதிக ரன்கள் சேர்க்கவேண்டும் என்ற தேவை கிடையாது என தெரிவித்திருந்தார். கோலியின் இந்தக் கருத்து குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், கோலி மிகப்பெரிய பொய் கூறுவதாக விமர்சித்திருந்தார். 
 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன், ‘இதுபோன்ற கருத்துகளைச் சொல்லி கேப்டனைத் தாக்குவதும், அவரது மனநிலையை குழப்புவதும் வழக்கமான ஒன்றுதான். கேப்டனை நிலைகுலையச் செய்துவிட்டால் ஒட்டுமொத்த அணியும் சீர்குலைந்துவிடும். எந்த பேட்ஸ்மேனுக்குதான் ரன் அடிக்க வேண்டாம் என்று தோன்றும்? ஆண்டர்சனாக இருந்தாலும் இதுதான் உண்மை. கோலி நிச்சயம் ரன் எடுப்பார். ஆனாலும், அவருக்கு அவரது தனிப்பட்ட ரன்களை விட அணியின் வெற்றியே முதன்மையானது. ஆண்டர்சனின் கருத்து முற்றிலும் குழந்தைத்தனமானதுதான்’ என தெரிவித்துள்ளார்.