இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தி, வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இரிந்தே ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. முதல் இன்னிங்ஸின் ஐந்தாவது பந்திலேயே முரளி விஜய்யை பவுல்டு ஆக்கிய அவர், அந்த இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதேபோல், அடுத்த இன்னிங்ஸிலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின்போது, முரளி விஜய் விக்கெட்டை வீழ்த்தினார் ஆண்டர்சன். கீப்பர் பேர்ஸ்டோவின் கையில் கேட்ச் கொடுத்துவிட்டு, ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார் முரளி விஜய். இந்த விக்கெட்டின் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் நூறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆண்டர்சனின் இந்த சாதனை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இலங்கையின் முத்தையா முரளிதரன் இதே சாதனையைப் படைத்துள்ளார். அவர் இலங்கையின் மூன்று வெவ்வேறு மைதானங்களில் இதே சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.