அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா வெற்றி
அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, ருமேனியாவின் சிமோனா ஹாலப்பை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் தக்க வைத்த ஷரபோவா, 2-வது செட்டை 4-6 என்ற கணக்கில் பறிக்கொடுத்தார். கடைசி செட்டை 6-3 என்ற கணக்கில் வெற்றியை தன் வசப்படுத்தினார். ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ஷரபோவா, 15 மாத தடைக்கு பின்பு பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.