இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முதல் ஒரு நாள் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பகுதிநேர பந்துவீச்சாளரான அம்பதி ராயுடுவுக்கு 2 ஓவர்கள் கொடுக்கப்பட்டது. அதில், மொத்தம் 13 ரன்கள் விட்டுக்கொடுத்த அவர், விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அம்பதி ராயுடுவின் பந்துவீசும் முறை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பந்துவீசும் விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக போட்டி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போட்டியின் நிர்வாகிகள், இந்திய அணி நிர்வாகத்திடமும் தகவல் தெரிவித்தனர்.
ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிட்னியில் நடந்த போட்டியில் பந்துவீசிய அம்பதி ராயுடுவின் ‘ஆஃப்-ஸ்பின்’ குறித்து போட்டி நிர்வாகிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதனால், இனிவரும் போட்டிகளில் அம்பதி ராயுடு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஐசிசி விதிமுறைகளின்படி பந்து வீசுகிறாரா? என ஆய்வு செய்யப்படும்.