Published on 09/02/2022 | Edited on 09/02/2022

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் விளையாடிவரும் நிலையில், இந்தாண்டு முதல் லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாக கொண்ட மேலும் இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளன.
இதில் லக்னோவை மையமாக கொண்ட அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தை மையமாக கொண்ட அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கே.எல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரையும், குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.