உலகக் கோப்பையின் 27வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில் இன்று (28-10-23) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச தேர்வு செய்தது.
அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் பார்ட்னர்சிப் அமைத்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அந்த வகையில், டேவிட் வார்னர் 65 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடித்து 81 ரன்களை குவித்தார். அதே போல், ட்ராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடித்து 109 ரன்களை குவித்தார்.
ஆஸ்திரேலியா அணி 19.1 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்திருந்த போது, டேவிட் வார்னர் முதல் அவுட்டானார். அதை தொடர்ந்து, களமிறங்கிய மிட்செல் மார்ஷ், க்ளென் மாக்ஸ்வெல் என 50க்கும் குறைவான ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தனர். இந்த போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.2 ஓவர்களில் 388 ரன்களை எடுத்திருந்தது.
இதன் மூலம், நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வீசிய பந்து வீச்சில் நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் மற்றும் ட்ரெண்ட் பவுல்ட் ஆகிய இரு வீரர்களும் தலா 3 விக்கெட்டைகளை எடுத்திருந்தனர். அதே போல், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மேட் ஹென்ரி ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தும் ஆட்டத்தை முடித்தனர். அதனை தொடர்ந்து, நியூசிலாந்து அணி 389 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.