Skip to main content

குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 26 பேர் உயிரிழப்பு! 

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

 tractor-trolley plunged into a pond kanpur

 

பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து அருகில் இருந்த குளத்தில் விழுந்ததில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

 

உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் மாவட்டம், ஃபத்தேபூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட 50- க்கும் மேற்பட்டோருடன் கடம்பூருக்கு டிராக்டர் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, பதேயுனா கிராமத்திற்கு (Bhadeuna village) சென்ற போது, கவிழ்ந்து அருகில் இருந்த குளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான். காயமடைந்தவர்களில் பலரின் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று கான்பூர் மாவட்ட ஆட்சியர் விஷாக் ஐயர் தெரிவித்துள்ளார். 

 

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

இதனிடையே, விபத்து குறித்து சார் காவல் நிலையத்தின் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்