'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நமக்கு தூக்கங்கிறது செல்போன்ல ரீசார்ஜ் ஆவது மாதிரி. தூக்கம் இல்லையென்றால் ஒருநாள் சமாளிக்கும் உடல். அதையே வாடிக்கையாக வைத்திருந்தால், திங்கிங் புராசஸ் ஸ்லோ ஆகும். நான் சோவியத் ஒன்றியத்தில் படித்த பொழுது, அங்கு 24 மணி நேரமும் டிவி உண்டு. ஷிப்ட் உண்டு. தூக்கமின்மையினால் வரக்கூடிய அவ்வளவு நோய்களை நாம் பார்க்கிறோம். தூக்கமின்மையினால் அதிகமான நோயாளிகளை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது 1994-ஆம் ஆண்டில் நாம் பார்க்காத ஒன்று.
காலப்போக்கில், அந்தந்த காலத்திற்கேற்ப, மனிதன் மாறுவதற்கேற்ப, மனிதன் தன் உடலைப் புரிந்துக் கொள்ளாத வரைக்கும் நோய்கள் வந்து கொண்டே இருக்கும். நமது உடலுக்குள் 24 மணி நேரமும் கிளாக் ஓடிக் கொண்டே இருக்கிறது. சூரிய உதயத்தோட வாழ்க்கையை ஆரம்பித்து, சூரிய அஸ்தமனத்தோட ஒரு நாள் வாழ்க்கையை முடிச்சிட்டு, 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்காகத் தான், இந்த மாதிரியான உடல் படைக்கப்பட்டுள்ளது.
தூக்கம் நமக்கு எவ்வளவு முக்கியம் என்றால், தூங்கினால் மட்டும் தான் பல உறுப்புகள் சரியாக இயங்கும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தூங்காத ஆண்களுக்கும், ஆறு மாதம் தொடர்ந்து தூங்காத பெண்களுக்கும் சர்க்கரை, இதயநோய், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தூக்கமின்மைக்கு ஸ்ட்ரஸ் ஒரு காரணமாக இருக்கலாம். தூக்கமின்மைக்கு உன்னுடைய வேலையை கையாள தெரியாமல் இருக்கலாம். இரவில் படித்துக் கொண்டே இருந்தால், பகலில் ஒன்றும் நியாபகம் இருக்காது. தூக்கமின்மை, மலச்சிக்கல், நியாபகமறதி இது வயோகத்திற்கான ஆரம்ப அறிகுறி ஆகும். தூக்கம் என்பது உடலுக்கு மிக அத்தியாவசியமான தேவை. எனவே, நன்றாக தூங்குவதற்கான வேலையை நாம் பார்க்க வேண்டும்" என்றார்.