அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதாலும் ,சுகாதாரம் இல்லாத நீரைக் குடிப்பதாலும் மற்றும் சில காரணத்தினால் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன . இதை சரி செய்ய சில வகையான உணவு முறைகளை பின்பற்றினால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைகளை சரி செய்யலாம் .எந்த மாதிரியான உணவு வகைகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம் .சுக்கு ஒரு தேக்கரண்டியுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், பட்டை, சிறிது தேன் சேர்த்து குழப்பி, தினமும் 3 வேளை சாப்பிட்டு வரவும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகம், கொத்தமல்லி சாறு, சிறிது உப்பு சேர்த்து உணவிற்கு பின் இரண்டு வேளை, 2-3 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுபோக்கு குணமாகும்.3 பூண்டு பல்லை மசித்து ஒரு கிளாஸ் அளவு பாலில் கொதிக்கவிட்டு தினமும் இரவு குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.முதல் நாள் இரவு 3 தேக்கரண்டி அளவு தனியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த தனியா விதைகளை சாப்பிட்டு ஒரு கப் மோர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.15-20 கருவேப்பிலை இலைகளை அரைத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.
கொய்யா இலைகளை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் 3 வேளை குடித்து வர வயிற்றுபோக்கு தீரும்.1/2 கப் இனிப்பான மாம்பழ சாறுடன் 25 கிராம் தயிர், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, தினமும் 2 அல்லது 3 வேளை குடித்து வர வயிற்று போக்சூ நிற்கும்.5 நெல்லிக்காய் சாற்றுடன் திராட்சை பழசாறு சிறிது கலந்து குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.மாதுளம் பழத்தோலும் பூவும் வகைக்கு ஒரு அவுன்சு எடுத்து, அவற்றை ஒரு லிட்டர் தண்ணீரிலே போட்டுக் காய்ச்சிக் கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி, அந்த கஷாயத்தை ஒரு தடவைக்கு ஓர் அவுன்சு வீதம் காலை, மாலை, இரவு மூன்று வேளைகளிலும் பருக வேண்டும்.நாவல் பழத்தின் சாற்றோடு சிறிது பனைவெல்லமும் பன்னீரும் சேர்த்து அருந்தினால், இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் எனவே உடலில் வரக்கூடிய பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் .