உலகம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்கேற்ப நாமும் சென்று கொண்டிருக்கிறோம். இடையில் ஏராளமான உடல் உபாதைகள் மனிதர்களை வதைக்கின்றது. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று உடலில் ஏற்படும் அதிகப்படியான சூடு. உடலில் இயல்பாக தோன்றும் இந்த சூடு உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அந்த வகையில் பழைய சாதம் இத்தகைய அதிகப்படியான உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஆற்றல் உடையது. முதல்நாள் சோற்றில் தண்ணீர் விட்டு அந்த சாதத்தையும், தண்ணீரையும் அருந்துவது என்பது உடலுக்கு மிக நல்லது. இதில் அடங்கியுள்ள பி6, பி12 வைட்டமின்கள் உடலுக்கு தேவையான சக்தியினை அளிக்கின்றது. மேலும் குடல் புண், வயிற்று வலி முதலியவற்றையும் இது படிப்படியாக குறைக்கும் ஆற்றல் உள்ளது.
மேலும் தொடர்ந்து பழைய சாதத்தை சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகின்றது. நாள் முழுக்க வேலை செய்தாலும் உடல் சோர்வின்றி இருக்கும் ஆற்றலை பழைய சாதம் கொடுக்கின்றது. அல்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு அருமருந்தாக பழைய சாதம் இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. மேலும் மலச்சிக்களை தீர்க்கும் ஆற்றல் இந்த பழைய சாதத்திற்கு அதிகம் இருக்கின்றது. இளமையாக அதே சமயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு பழைய சாதம் நல்ல உணவுவாக அமைந்துள்ளது. தோல் சம்பந்தமான நோய்களை போக்கும் வல்லமை இதற்கு மிக அதிகம். துரித உணவுகளை போன்று உடலுக்கு எந்த கெடுதலையும் இவை தராது என்பதே இதன் மிகமுக்கிய பயன்கள் ஆகும்.