பழங்கள் பெரும்பாலும் உடலுக்கு நன்மை பயக்குவதாக இருந்தாலும், கிவி பழம் சற்று சிறப்பான பயன்களை தரவல்லது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிவி பழத்தை வாரத்திற்கு மூன்று என்ற விகிதத்தில் இரண்டு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். கிவியை வெறும் வாயில் சாப்பிட முடியாவிட்டால் தேன் மற்றும் பால் முதலியவற்றோடு கலந்து சாப்பிடலாம். கிவி பழத்திற்கு மலமிளக்கு தன்மை அதிகம் உள்ளதால் மல சிக்கலை பெருமளவு குறைக்கின்றது. சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்கு கிவி அருமருந்தாக இருக்கின்றது.
கிவி பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது. இதில் மற்ற பழங்களை விட அளவுக்கு அதிகமான நார் சத்துக்கள் இருப்பதால் உடலில் சேருகின்ற கெட்ட கொழுப்புக்களை நீக்குகின்றது. இதனால் உடல் எடை சீரான முறையில் இருக்கும். மிருதுவான சருமம் அமைவதற்கு கிவி பழம் உதவி புரியும். கிவி பேஸ் பாக் செய்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகத்தில் தோன்றும் கருவளையங்கள் மறையும். கிவி பழம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் என்றால் அது மிகையல்ல.