இளைஞர்களின் மீதான என் எதிர்பார்ப்பு, இளம் வாலிபர்கள் எப்போதும் ஈ அடிச்சான் காப்பியாக இருக்க கூடாது. புது புது வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பல வகை போராட்ட முன் வடிவங்களை கையில் எடுக்க வேண்டும். யாரும் உன் மீது எதையும் திணிக்க கூடாது. சுய அறிவை உபயோகப் படுத்துங்கள். நூறு பூக்கள் மலரட்டும் . நூறு எண்ணம் விரியட்டும். கோடிக் கைகள் உயரட்டும். கொடுமை வாழ்வு முடியட்டும். சிங்கங்கள் கர்ஜிக்கும் போது நெஞ்சுரமற்ற எல்லா கோழை களும் ஒடி மறைவார்கள். என் இந்திய மக்கள் பசியுடன் படுத்துறங்க கூடாது. வாருங்கள், வந்து உங்கள் குரலை உயர்த்துங்கள். அடிமைத்தனத்துக்கு எதிராக வீறு கொண்டு எழுங்கள். ஒன்று படுங்கள், தேசம் காக்க.
இளம் வாலிபர்களே உங்களை சுற்றி இந்தியக் கலாச்சாரம் பாதுகாவலாய் உள்ளது. போர் முரசுகளோடு மட்டுமே பயணிப்பவர்கள் அல்ல இளைஞர்கள். பூக்களோடும் மகிழ்ந்து கூத்தாடுங்கள். அழகை ரசியுங்கள். நம் தேசத்தின் அழகு மாசுபடக் கூடாது. பூக்களை வாட விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆட்டம், பாட்டம், விளையாட்டு, அறிவியல் என அனைத்தும் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். பெண்களை மதியுங்கள். குழந்தைகளை பாதுகாத்திடுங்கள். தேசம் காக்க ஒன்று படுங்கள். இந்தப் போர் என்னோடு தொடங்கவும் இல்லை. என்னோடு முடிவதும் இல்லை.
மாவீரன் பகத்சிங்