'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் தொடர்ச்சியாக நேர்காணல் அளித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, "அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் செல்லப்பிராணி வளர்ப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றால் செல்லப்பிராணி குரைக்கும் போது, அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே, அடுக்குமாடி குடியிருப்பில் உயிரினங்கள் வளர்க்கப்படுவதைத் தவிர்க்கலாம். எனினும், தனி வீட்டில் வசிப்பவர்கள் நாய், பூனையை வளர்க்கலாம். இருப்பினும், குறுகிய காலத்தில் 20 முதல் 30 பூனைகளை வளர்க்கிறார்கள். இது நமது உடலுக்கு கேடு விளைவிக்கும். உலகம் முழுவதும் தனியாக மனிதர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், தாங்கள் விரும்பும் செல்லப்பிராணியை வாங்கி வளர்ப்பது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் வளர்ப்பது நல்லது.
குழந்தை உள்வாங்குவது என்றால், கடல் உள்வாங்குவது மாதிரி. நன்றாக விளையாடிக் கொண்டு, சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் குழந்தை, திடீரென்று பேசாமல் தனிமையை விரும்புகிறது என்றால், அந்த குழந்தையை அந்த பாதையில் போக விடக்கூடாது. தனி அறையை மூடி, அதில் குழந்தைகள் இருப்பதே தவறு. உறங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் அறையில் அமரக் கூடாது. குழந்தை விளையாடினாலும், செல்போனை குழந்தைப் பயன்படுத்தினாலும், எல்லோருடனும் ஹாலில் அமர்ந்துதான் செய்ய வேண்டும்.
தனியாக விட்டுவிட்டோம் என்றால், ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு உள்ளது. பேசி பழகாத குழந்தைகள், ரொம்ப எளிதாக அந்த வலைக்குள் விழுந்து விடுவார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், படித்த குடும்பம், படிக்காத குடும்பம், பெரிய பள்ளிகள், சிறிய பள்ளிகள், அரசுப் பள்ளிகள் எல்லாவற்றிலும், இவை இரண்டரை கலந்திருக்கிறது.
அடிமைத்தனம் என்பது போதைவஸ்துகளுக்கு வந்தாலும், அவர்கள் அந்த வாழ்க்கையையே இழந்து போகிறார்கள். விஞ்ஞானம் நமக்கு என்ன கொடுத்திருக்கிறது என்றால், யாருக்கும், எதற்கும் அடிமையாக இருக்க வேண்டியதில்லை என்பது தான். உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூட, அதற்கு நீ அடிமையாகிறாய் என்று தான் அர்த்தம். அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு. உழைப்பில் இருந்தும், உணவில் இருந்தும், சந்தோஷத்தில் இருந்தும் ஒரு அளவைத் தாண்டக் கூடாது. இது இல்லாமல் வாழ முடியாது, அப்படி என்கின்ற இடத்திற்கு போதை வஸ்துக்கள் தள்ளும் என்பதைத் தெரிந்து கொண்டு, எது இல்லாமலும் நாம் வாழ முடியும் என்று நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்". இவ்வாறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.