சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு, பீகார் மாநிலத்தில் மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தால் ரூ.25,000, பட்டதாரியானால் ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பதற்கு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைமையிலான கூட்டணிக்கும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு, பீகார் மாநிலத்தில் மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்தால் ரூ.25,000, பட்டதாரியானால் ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும், அனைத்துக் கிராமங்களிலும் சூரியசக்தி தெரு விளக்குகள் அமைத்துத் தரப்படும், முதியவர்களுக்குக் காப்பகங்களும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகளும் அமைத்துத் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.