உச்சநீதிமன்றத்தில் பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பல வழக்குக்களை நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்தும் வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள் பெண் எம்.எல்.ஏ ஒருவர் நுழைந்ததால் கங்கை நீரை கொண்டு கோவிலை சுத்தம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசத்தில் ஹைம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அனுராகி என்ற பெண் எம்.எல்.ஏ வருகைதந்துள்ளார். அந்த ஊர் வாசிகள் அந்த கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என கட்டுபாட்டை வைத்துள்ளனர். எனேவ அந்த கோவிலுக்குள் இதுவரை எந்த பெண்களும் அனுமதிக்கப்பட்டதில்லை இப்படிப்பட்ட நிலையில் அவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது எனக்கூறி அந்த கோவில் பகுதியில் இருந்த துறவி ஒருவர் கங்கை நீரைகொண்டு முழு கோவிலையும் சுத்தம் செய்துள்ளார்.
ஏற்கனவே சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் பெண் எம்.எல்.ஏ கோவிலில் புகுந்ததற்கு கங்கை நீரை கொண்டு கோவிலை சுத்தம் செய்த சம்பவம் பெரும்பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.