Skip to main content

தினசரி ராசிபலன் - 26.06.2020

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்

26-06-2020, ஆனி 12, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.03 வரை பின்பு வளர்பிறை சஷ்டி திதி பின்இரவு 05.04 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பகல் 11.25 வரை பின்பு பூரம். மரண யோகம் பகல் 11.25 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கௌரி விரதம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00
 

தினசரி ராசிபலன் - 26.06.2020

mesham

மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

reshabam

ரிஷபம்
இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் வெளி வட்டார நட்பு ஏற்படும்.

3

மிதுனம்
இன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

kadagam

கடகம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

5

சிம்மம்
இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

kannirasi

கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற கடின உழைப்பு தேவை. வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மனஉளைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

thulam

துலாம்
இன்று வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

viruchagam

விருச்சிகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். சுபகாரியம் கைகூடும்.

danush

தனுசு
இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

magaram

மகரம்
இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

kumbam

கும்பம்
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். கடன்கள் குறையும்.

meenam

மீனம்
இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.