இன்றைய பஞ்சாங்கம்
24-03-2023, பங்குனி 10, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி மாலை 05.00 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 01.22 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 01.22 வரை பின்பு சித்தயோகம். சௌபாக்கிய கௌரி விரதம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார பிரச்சினைகள் குறைந்து எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் பெருகும்.
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த பண உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் இனிய செய்திகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும்.
தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். உத்தியோக ரீதியாக பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
கும்பம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.