மிதுனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.
கடகம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். கடன்கள் ஓரளவு குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.
துலாம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் முன்னேற்றத்தை காணலாம்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.