மேஷம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். பழைய கடன்கள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
இன்று குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். லாபம் பெருகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும்.பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு இழப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
தனுசு
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாககூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
மீனம்
இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.