Skip to main content

இரவு வேளையில் வீட்டில் துணி துவைத்தால் நோய் வரும்!

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

மகிழ்வுடன் வாழவேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் நாம் வசித்துக்கொண்டிருக்கும் வீட்டிலுள்ள சிறிய சிறிய தோஷங்கள்கூட மகிழ்ச்சியை இல்லாமல் செய்துவிடும்.ஒருவர் அடிக்கடி சீதளத் தொல்லைக்கு ஆளானால் அவர் வீட்டின் வடமேற்கில் படுக்கிறாரா என்று கவனிக்க வேண்டும். ஏனென்றால், வடமேற்கில் படுத்தால் உணவு ஜீரணமாகாது. அதனால் உடலில் கபம் பிடிக்கும்; சீதளம் வரும். அவர் வடமேற்கில் படுப்பதற்கு பதிலாக தென்மேற்கு அறையில், தெற்கில் தலைவைத்துப் படுத்தால் நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவதை அனுபவத்தில் உணரலாம்.வீட்டில் தூக்கம் சரியாக வரவில்லையென்றால், படுக்கையறையிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கிவிட வேண்டும். கட்டிலுக்கு அடியில் இரும்புப் பொருட்கள், செருப்புகள் ஆகியவை இருந்தால் சரியாகத் தூக்கம் வராது. மேற்கில் தலைவைத்துப் படுத்தாலும் சரியாகத் தூக்கம் வராது. கிழக்கில் அல்லது தெற்கில் தலைவைத்துப் படுத்தால் நன்கு தூக்கம் வரும். குழந்தைகளுக்கு உடல்நலக்குறை இருந்தால், அந்த வீட்டின் சமையல் மேடைக்குக் கீழே நீர்பிடித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கும். எனவே சமையல் மேடைக்குக் கீழே நீர்பிடித்து வைப்பதைத் தவிர்க்கவேண்டும்

god

சிலருக்கு அடிக்கடி சிறுவிபத்துகள் நடக்கும். வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால் இவ்வாறு ஏற்படும். வடகிழக்கில் நீர்பிடித்து வைக்க வேண்டும். நீர்த்தொட்டி இருக்கவேண்டும்.ஒரு குடும்பத்தில் சொத்துப்பிரச்சினைகள் இருந்தால், அந்த வீட்டின் மத்திய பகுதியில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருக்கிறது என்று அர்த்தம். அதை வடக்கிலோ வடகிழக்கிலோ மாற்றினால் சொத்துப் பிரச்சினைகள்இருக்காது.வீட்டின் தென்மேற்குப் பகுதியில் கிணறு இருந்து தெற்கு காலியாக இருந்தால், அந்த வீட்டிலிருக்கும் பெண்களுக்கு திடீரென்று நோய் வரும். அங்கிருக்கும் ஆண்மகன் குடும்பத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடக்கூடும். வீட்டில் சந்தோஷம் இருக்காது. கிணறு வடக்கில் இருப்பதே நல்லது.வீட்டின் மத்தியில் சமையலறை இருந்தால், அந்த வீட்டிலிருக்கும் முதல் மருமகளுக்குப் பிரச்சினை உண்டாகும். சமையலறை தென்கிழக்கு அல்லது வடமேற்கில் இருந்தால் பிரச்சினைகள் நீங்கும்.படுக்கையறையின் தெற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால், அங்கு படுப்பவர்களுக்கு வாயுத்தொல்லை உண்டாகும். கண்ணாடியை வடகிழக்கில் மாற்றுவது நல்லது.பெருக்கும் துடைப்பத்தைச் செங்குத்தாக வைக்கக்கூடாது. வைத்தால் சண்டை உண்டாகும். அதை படுத்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மறைவாக வைக்கவேண்டும்.