Skip to main content

கல்வியில் முன்னேற்றம் வேண்டுமா? - ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் விளக்கம்

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
astrologer lalgudi gopalakrishnans explanation 6

ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு ஏற்ற காலத்தைப் பற்றி ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

ஜாதகத்தில் புதன் தசை வரவில்லை என்பார்கள். புதனால் வரக்கூடிய பலனை எவ்வாறு அனுபவிப்பது என்று பார்ப்போம். கல்விக்கான கிரகம் புதன். அதனால்தான் புதனின் வீடாகிய கன்னி ராசியில் சூரியன் வரும் காலத்தில் சரஸ்வதி பூஜை வருகிறது. கல்வி தொடக்கக் காலமும் சரஸ்வதி பூஜை வருகின்ற காலத்தில்தான் ஆரம்பிக்கிறது. புதனுடைய அம்சம் ஹயக்ரீவர். இந்த ஹயக்ரீவர் சரஸ்வதியின் குரு நாதராக இருக்கிறார்.

தகவல் தொடர்பைக் கையாள காரணமாக இருக்கக்கூடிய கிரகம் புதன். கல்வி மற்றும் மொழி ஆகியவை தகவல் தொடர்புதான். தகவல் தொடர்பு இல்லையென்றால் உங்களுக்கும் உலகத்துக்கும் தொடர்பே இருக்காது. அந்த தொடர்பு ஏற்படவேண்டுமென்றால், கல்வி அவசியமானது. கல்விக்கான புதனின் தசை ஒருவற்கு 70 வயதில் வந்தால், அதற்கு மேல் அவரால் கல்வி கற்று பயனை அடைய முடியாது. இளமையில் அவருக்கு கல்விக்கான புதனின் தசை வந்தால்தான் அவரால் கல்வியில் மேம்பட முடியும்.

பெரும்பாலான இளைஞர்களுக்கு சுக்கிர திசை வந்துவிடும். சுக்கிரன் என்பவர் சுகவாசி. அவரால் கலை மற்றும் காதலை ஈடுபடுத்த முடியும். அதனால் சுக்கிர திசை இருப்பவர்களுக்கு கலையிலும் காதலிலும்தான் நாட்டம் இருக்கும் கல்வியில் இருக்காது. புதனுடைய செயலாற்றலை இளம் வயதில் பெறுவதற்கு ஹோரை அறிந்து செயல்பட்டால் தசாபுக்திகளின் பலன் கிடைக்கும். ஒருவர் 120 வருடம் வாழ்ந்தால்தான் அவருக்கு எல்லா தசாபுக்திகளும் வரும். இப்போது மனிதனுடைய அதிகபட்ச ஆயுள் என்பது 80 அல்லது 90 தான்.

ஒரு தசையின் பகுதிதான் புக்தி. ஒரு நாளின் பகுதிதான் ஹோரை. அதனால் கல்வி கற்க அதிக ஈடுபாடு இருப்பவர்கள் புதன் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை படிக்கத் தொடங்கினால் கட்டாயமாக புதன் தசையின் பலனை அடைந்துவிடலாம். ஹோரை என்பது ராகு காலம் எமகண்டத்தைவிட மிகவும் பலம் வாய்ந்தது. ஹோரை 7 கிரகத்திற்கு மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ராகு மற்றும் கேதுவுக்கு கொடுக்கப்படவில்லை. காரணம் 7 கிரகத்துக்குத்தான் நாட்கள் இருக்கிறது. அந்த ஹோரையை(6 - 7) அனுசரித்து எல்லா வேலையும் செய்தால் கட்டாயமாக தசையின் பலனை அனுபவிக்கலாம் என்றார்.