Skip to main content

ஆடி அமாவாசை - மயிலை கபாலீசுவரர் கோயில் & மெரினாவில் திதி கொடுத்தல்... (படங்கள்)

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

ஆடி, அமாவாசையையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள தெப்பக்குளம் மற்றும் மெரினா கடற்கரையில் இறந்த முன்னோர்களுக்கு மக்கள் திதி கொடுத்தனர்.

 

ஆடி அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்த நாள் என்று நம்பப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும், நீரில் இட்டு பித்ரு ப்ரீதி எனப்படும் சடங்கினை பெரும்பாலும் கடற்கரை அல்லது நதிகளில் செய்வர்.

 

ஆடி, அமாவாசை நாளான இன்று (ஜூலை 20), சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தெப்பக்குளம் மற்றும் மெரினா கடற்கரையில் முன்னோர்களுக்கு மக்கள் பலர் திதி கொடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோயில் வாசலில் தீ பற்ற வைக்கப்பட்ட சம்பவம்; போலீசார் அதிரடி

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Incident of setting fire at temple gate Police action

மயிலாப்பூர் கோயில் வாசலில் தீ பற்ற வைத்த நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலின் நுழைவு வாயிலில் கடந்த 6 ஆம் தேதி (06.02.2024) இரவு சுமார் 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றித் தீயிட்டு எரித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோயில் நிர்வாகத்தின் கண்காணிப்பாளர் பாலமுருகன் என்பவர் சார்பில் மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் கோயிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததாக அனந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரை பாரிமுனையில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இவரிடம் கோயில் முன்பு எதற்காக பெட்ரோல் ஊற்றி தீ பற்றி வைத்தார் என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

உண்டியல் காணிக்கை கணக்கிடுவதை நேரலை செய்யும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார் (படங்கள்) 

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கைகளைக் கணக்கீடு செய்யும் பணிகளைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலைத்தளத்தில் காணும் வகையில் நேரலை செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு மற்றும் பலர் உடன் இருந்தனர்.