Published on 06/04/2020 | Edited on 06/04/2020
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70,172 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக இத்தாலியில் 15,887, ஸ்பெய்னில் 13,055, அமெரிக்காவில் 9,620, பிரான்ஸில் 8,078, பிரிட்டனில் 4,934, ஈரானில் 3,603, சீனாவில் 3,329, மலேசியாவில் 62, சிங்கப்பூரில் 6, பாகிஸ்தானில் 50, இலங்கையில் 5 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கரோனாவால் 12,82,040 பேர் பாதித்துள்ள நிலையில் 2,69,451 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,36,851, ஸ்பெய்னில் 1,35,032, இத்தாலியில் 1,28,948 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.