Published on 24/03/2020 | Edited on 24/03/2020
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பு 3,78,741 ஆக உயர்ந்த நிலையில் 1,01,608 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரே நாளில் 601 பேர் கரோனாவால் இறந்ததால் பலி எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் 3,277, அமெரிக்காவில் 550, ஸ்பெயினில் 2,311, ஜெர்மனியில் 123, ஈரானில் 1,812 கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.