சிம் கார்டு மூலம் இணைய சேவை பெறுவதற்கு வசதியான பென்டிரைவ் போன்ற கருவிகளையும் மொபைல் போன்களையும் தயாரிக்கும் சீன நிறுவனம் ஹுவாவேய். இந்த நிறுவனத்தின் கருவிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. உளவு பார்ப்பது உள்ளிட்ட காரியங்களை குறிப்பிட்டு இந்தக் கருவிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் முழுமையாக 4ஜி அலைவரிசையை வழங்க அனுமதிக்காத மோடி அரசு, ஜியோவை தனது செல்லப்பிள்ளையாக வளர்க்கிறது. அந்த நிறுவனத்துக்கு சலுகைகளை வழங்கி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சாதனங்கள் அனைத்தையும் ஜியோ பயன்படுத்த அனுமதிப்பதாக புகார்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், இந்திய தனியார் மொபைல் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநாடு டெல்லியில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஹுவாவேய் நிறுவனமும் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிறுவனம் செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் இந்திய பயணம் தொடங்கவுள்ள நிலையில் ஹுவாவேய்க்கு கிடைக்கவுள்ள சலுக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.