Skip to main content

இனி வேண்டாதவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்... வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

WhatsApp

 

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் செய்திகளைப் பகிர்வதற்கும், தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கும் பல செயலிகள் உள்ளன. அவற்றுள் பரவலான மக்களால் பயன்படுத்தக்கூடிய செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது.

 

மற்ற செயலிகளை விட இதன் வேகமும், எளிமையாகக் கையாளும் முறையும் சாதாரண மக்கள் பயன்பாடு முதல் அலுவலகப் பயன்பாடு வரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இதனை மாற்றியிருக்கிறது. அதே நேரத்தில், பணி அல்லது உறவு நிர்பந்தம் காரணமாகச் சில நபர்களிடமோ அல்லது சில குழுவிலோ நாம் வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பில் இருக்க வேண்டி வரும். அவர்கள் அனுப்பும் செய்திகளை முழுமையாக நம் கவனத்திற்குக் கொண்டு வரமால் இருக்க, எந்த வழியும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த குறையைப் போக்கும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, இனி தேவையற்ற நபர்களின் அல்லது குழுவின் செய்திகளை, நிரந்தரமாக நம் கவனத்திற்கு வராமலேயே (Mute) செய்துவிட முடியும். வாட்ஸ்அப் அறிவித்த இந்தப் புதிய அப்டேட்டானது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

இதற்கு முன்பு பிறரின் செய்தியை நம் கவனத்திற்குக் கொண்டுவராமல் இருக்கும் வசதியானது (mute), ஒரு வருட காலம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்