சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு குழந்தை, 5 ஆண்டுகளில் மொத்தமாக 32,000 குழந்தைகள் தங்கள் உயிரை புலம்பெயர்வு என்ற ஒற்றை காரணத்தால் இழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர்களால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை நோக்கி வேறு நாடுகளுக்கு புலம் பெயர்கின்றனர். குடும்பம் குடும்பமாக பெற்றோர், குழந்தைகள், வயதானவர்கள் என ஆபத்தான வழித்தடங்களில் தங்கள் வாழ்வாதாரத்திற்கான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அப்படி செல்லும் பொது எதிர்பாராத தாக்குதல், விபத்து, இயற்கை பேரிடர் என பலவற்றால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி நடைபெறும் சம்பவங்களில் குழந்தைகளும் உயிரை விடுகின்றனர். அந்த வகையில் புலம்பெயர்தல் காரணமாக இறந்துபோன குழந்தைகள் குறித்த அறிக்கையை ஐ.நா சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் புலம்பெயரும்போது இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே 32,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1600 குழந்தைகள் 6 மாதத்திற்கு குறைவான வயதுடைய பச்சிளம் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.