Skip to main content

உலகின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் - ஐக்கிய நாடுகள் சபை

Published on 23/01/2019 | Edited on 23/01/2019

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறை தயாரித்துள்ள அறிக்கையில், நாடுகளிடையிலான வர்த்தகப்போர் மற்றும் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் உலகின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

uu

 

 

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன பொருள்கள் மீது அதிக வரி விதித்தார். அதுமட்டுமின்றி கனடா, மெக்சிகோ இடையிலான வர்த்தக பேரங்களும் நடைபெற்றன. மேலும் உலகம் வெப்பமயமாதலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாததனால், உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு வளரச்சி பாதிக்கப்படும். இது பொருளாதார பின்னடைவுக்கு வழி வகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார நிபுணர் எலியட் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலகின் 2வது மிகப் பெரிய பணக்காரர் கவுதம் அதானி

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Gautham Adani is the 2nd richest person in the world!

 

உலகில் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உயர்ந்துள்ளார். 

 

ஃபோர்ப்ஸ் இதழின் பெருமை பணக்காரர் பட்டியலின் படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இதன் மூலம் ஏற்கனவே இரண்டாவது பெரும் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளியுள்ளார் அதானி. 

 

அதானி குழும பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால், அவருடைய சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், சுரங்கம், உள் கட்டமைப்பு, மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் வர்த்தகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

17 மாதங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சம்தொட்ட விலைவாசி உயர்வு!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Price peaks at 17 months!

 

நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. 

 

கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மார்ச்சில் சில்லறை விலை பணவீக்கம் 6.95% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவாகும். சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்ததே பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக, கூறப்படுகிறது. 

 

பணவீக்கம் சமையல் எண்ணெய் பிரிவில் 18.8% ஆகவும், காய்கறிகள் பிரிவில் 11.6% ஆகவும் இருந்தது. இறைச்சி மற்றும் காய்கறிகள் பிரிவில் பணவீக்கம் 9.6% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகள் பிரிவில் 9.4% ஆகவும் இருந்தது. மேலும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பணவீக்கம் 8% ஆகவும், சுகாதாரப் பிரிவில் 7% ஆகவும் உயர்ந்துள்ளது. 

 

கிராமப் புறங்களில் சில்லறை விலை பணவீக்கம் 7.7% ஆக இருந்த நிலையில், நகர்ப்புறங்களில் அது 6.1% மட்டுமே இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதால், நிலைமையைச் சமாளிக்க வங்கிக் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் எனத் தெரிகிறது.