சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர் அளவிற்கு அமேரிக்கா அதிபர் டிரம்ப் வரிவிதித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப்போர் நிலவிவந்த சூழலில் இனி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் விமானபாகங்கள், வேளாண்பொருட்கள், செமிகண்டக்டர்கள் உள்ளிட்ட பலபொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துடைமைகளை திருடுவதாகவும் இதனால் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டிவந்த நிலையில் தற்போது இந்த வரி உயர்வை அமல்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி இன்னும் 2 வாரத்தில் இந்த வரிவிதிப்பு மேலும் 19 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு உயரும் என்றும் அதோடு நின்றுவிடாமல் வருங்காலங்களில் இந்த வரிவிதிப்பு உயர்வு 550 பில்லியன் டாலரை எட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் சோயாபீன்ஸ்,பன்றி இறைச்சிக்கு வரிவிதிப்பை கூட்டும் பச்சத்தில் சீனா மீதான இந்த அமெரிக்க வரிவிதிப்பு இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.