Published on 04/07/2018 | Edited on 04/07/2018
ஈரானுக்கு மழைவரக்கூடாது என்ற நோக்கில் எங்கள் நாட்டிற்கு வரும் மேகங்கள் திருடப்பட்டுள்ளது என ஈரான் ராணுவ தளபதி இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஈரான் நாட்டு ராணுவ தளபதி குலாம் ரேசா ஜலாலி கூறுகையில், இஸ்ரேல் மற்றும் பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஈரான் மீது படரும் மேகங்களை கடத்தி திருடியுள்ளது. கடந்த நாட்களாலாகவே ஈரானின் வானிலை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2200 மீட்டருக்கு மேல் ஆப்கானிஸ்தானிலிருந்து மத்தியதரைக்கடல் வரை நன்கு படர்ந்துள்ள மேகங்கள் ஈரானில் மட்டும் காணவில்லை எனக்கூறியுள்ளார். மேலும் இது மற்ற நாடுகள் செய்த சதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி எங்கள் நாட்டின் மேகங்களை அயல் நாட்டினர் திருடிவிட்டனர் என ராணுவ அதிகாரி கூறியுள்ள குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.