பாதுகாப்பு என்பது ஆடம்பர பொருட்களை வாங்கும் பணம் படைத்தவர்களுக்கானது மட்டுமல்ல என சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான கூகுள் வருங்கால திட்டங்கள் குறித்து அறிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கொள்கைகள் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் இயங்குதளமான ஆண்ட்ராய்டு பல நேரங்களில் பாதுகாப்பின்மைக்காக சர்ச்சையில் சிக்குகிறது. தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள சுந்தர பிச்சை, "பாதுகாப்பு என்பது ஆடம்பர பொருட்களை வாங்கும் பணம் படைத்தவர்களுக்கானது மட்டுமல்ல. அது அனைவருக்குமானது. நான் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். ஒவ்வொரு நாட்டிலும் தனி நபர் உரிமைகள் மாறுகின்றன. ஆனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் குறித்த தகவல்கள் பகிரப்படுவது குறித்து விழுப்புடன் இருக்கிறார்கள். கூகுள் நிறுவனம் அனைத்து மக்களுக்குமான தனி மனித உரிமையையும், தகவல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது" என கூறியுள்ளார்.