ஜெர்மனியில் இளைஞரை அணில்குட்டி துரத்துவதாக போலீசாருக்கு வினோத புகார் வந்துள்ளதை அடுத்து போலீசார் அணிலை கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஜெர்மனியில் கார்ல்ஸ்ருஹே என்ற இடத்தில் வாலிபர் ஒருவரை அணில் குட்டி ஒன்று விரட்டுவதாகவும் அவரை காப்பாற்றும்படியும் போலீசாருக்கு அழைப்பு வந்தது. இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்ட காட்சி அவர்களையே திகைத்த செய்தது புகார் படியே அங்கு ஒரு குட்டி அணில் ஒரு இளைஞரை விரட்டிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த அணில் சோர்வாகி இளைஞரை துரத்துவதை நிறுத்திக்கொண்டது.
பின்னர் அந்த அணிலை பிடித்த போலீசார் அதற்கு ''கார்ல்'' என செல்லமாக பெயர் சூட்டி அங்குள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர். அணில் துரத்துகிறது என்ற புகாரும் அதை தொடர்ந்து அணிலை கைப்பற்றிய நிகழ்வும் ''அணிலை கைது செய்த போலீசார்'' என நகைச்சுவையாக அந்த அணிலின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.