ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் லிங்க்டு-இன் ஆகிய சமூக வலைதளங்களை விசாரணை நடத்தப்போவதாக ஐரோப்யி ஒன்றியத்தின் பொது தரவுகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை தெரிவித்துள்ளது.
இந்த சமூகவலைதளங்கள் எல்லாம் தன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தரவுகள் மற்றும் அவர்களின் தனியுரிமை பாதுக்காப்பு விஷயங்களில் பல முறை முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அதனால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.பி.ஆர். எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவுகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டு மே முதல் அமலில் இருந்துவருகிறது.
இதுவரை இந்நிறுவனத்திற்கு ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் லிங்க்டு-இன் ஆகிய வலைதளங்களின் மீது மொத்தம் 15 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் ஃபேஸ்புக் மீது 7 வழக்குகள், வாட்ஸ்-ஆப் மீது 2, இன்ஸ்டாகிராம் மீது 1, ஆப்பில் மற்றும் ட்விட்டர் மீது தலா 2 வழக்குகள் மற்றும் லிங்க்டு-இன் மீது ஒரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்தவருட இறுதிக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பும் வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மீது வாடிக்கையாளர்களின் தரவுகளை அதிகம் வெளியிடுவதாகவும், வாட்ஸ் ஆப் மீது அந்நிறுவனம் எப்படி தனது வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாக்கிறது என்றும், மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் எவ்வாறு தகவல்களை பரிமாறிக்கொள்கிறது என்பது தொடர்பான வழக்கும் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.