Skip to main content

ஒரேநேரத்தில் 11 ஸ்மார்ட்போன்கள் -போகிமேன் கோ-வில் கலக்கும் 70 வயது முதியவர்!!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018

தைவானில் கிட்டத்தட்ட 11 ஸ்மார்ட் போன்களுடன் 20 மணிநேரம் போகிமேன் கோ கேம் விளையாடும் 70 வயது முதியவர் பிரபலமாகி வருகிறார்.

 

தைவானில் சே-சான் யான் என்ற 70 வயது நிறைந்த முதியவர் கிட்டதட்ட 11 ஸ்மார்ட் போன்கள், ஒன்பது பவர் சேவர்கள் என அனைத்தும் எப்போதும் கையில் வைத்தபடியே தெரு, கடைகள் என எங்கே சென்றாலும் ஸ்மார்ட்போன்களுடன் வலம் வருகிறார்.

 

smartphones

 

 

 

smartphones

 

 

smartphones

 

 

 

அவர் பயணிக்கும் சைக்கிளில் கூட பிரத்யேகமாக ஒரு மொபைல் ஸ்டான்டை உருவாக்கி அதன் மூலம் மொபைலை இயங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரே நேரத்தில் 11 ஸ்மார்ட் போன்கள் மூலம் 20 மணிநேரம் போகிமேன் கோ விளையாடுவதே இவரது பொழுதுபோக்காகவும் இருந்து வருகிறது

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை முயற்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Arrested old man attempted to incident

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

Arrested old man attempted to incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு, ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கருணாஸும், விவேகானந்தனும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குளிக்க பயன்படுத்தும் சோப்பைச் சாப்பிட்டும், துணியால் முகத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

Next Story

வீட்டை விட்டுச் சென்ற முதியவர்; குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Old man drowned in drain

ஈரோடு பெருமாள்மலை பாரதிநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் நடராஜ் (60). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாயமான நடராஜை கண்டுபிடித்து தரும்படி சித்தோடு போலீசில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் உள்ள படிக்கட்டில் முதியவர் பிணம் கிடப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாயமான நடராஜ் பிணமாக கிடந்ததும், அவர் காலிங்கராயன் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து நடராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.