Skip to main content

இனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா புதிய திட்டம்...

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

hfghgfhf

 

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து நிலவுக்கு அருகில் புதிய விண்வெளி நிலையம் அமைப்பதற்கான புதிய உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன. அதன்படி 2024 முதல் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் இதில் தங்கி இருந்து நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நிலவை பற்றி புது விஷயங்களை ஆராயவும் இது உதவியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்பவர்கள் நிலைகொள்ளும் இடமாகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனா நிலவின் யாரும் செல்லாத பின் பகுதிக்கு தனது விண்கலத்தை அனுப்பியது. தற்போது இதற்க்கு போட்டி போடும் விதமாக விண்வெளி ஆராய்ச்சியில் எதிர் எதிராக இருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து இந்த புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்