Skip to main content

இட ஒதுக்கீடு விவகாரம்; வங்கதேச உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Reservation issue;  Bangladesh Supreme Court action order

வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு வங்கதேசம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு அந்த இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் போரில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டின் அரசு அறிவிப்பினை வெளியிட்டது.  இது தொடர்பான வழக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

அதே சமயம், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதோடு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் அமைப்பினர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும், காவலர்களுக்கும் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட  100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

Reservation issue; Bangladesh Supreme Court action order

இதற்கிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், அனைத்து விடுதிகளையும் மாணவர்கள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த  இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம் முழுவதும் கலவரம் வெடித்த நிலையில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்