ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரிட்டிஷ் பொம்மைகள் சில்லறை விற்பனையாளராக உள்ள ஹெம்லெஸ் (HAMLEYS TOYS) நிறுவனத்தை வாங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறது. அதே போல் சில்லறை மற்றும் தொலைத்தொடர்பு துறை வழியாக நுகர்வோர் பொருட்களுக்கான துறையிலும் தனி இடம் பதித்து வருகிறது. ஹெம்லெஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எவ்வளவுக்கு வாங்கியது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. 2015 சி நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுகளை கொடுத்து வாங்கியது. 250 ஆண்டுக்கால நிறுவனத்தை வாங்கியதன் மூலம் உலகளவில் ரிலையன்ஸ் நிறுவனம் தனக்கென்று தனி முத்திரையை பதிக்க தொடங்கியுள்ளது என ரிலையன்ஸ் ப்ராண்ட்ஸ் தலைமை நிர்வாகி தர்ஷன் மேத்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் "உலகளாவிய சில்லறை விற்பனையை முன்னிட்டு" இந்த நிறுவனம் வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஹெம்லெஸ் நிறுவனம் 1760 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஆகும். இந்த ஹெம்லெஸ் பொம்மை நிறுவனம் பல நிறுவனங்கள் கைமாறி வந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 29 நகரங்களில் 88 கடைகள் உள்ளனர், அதே போல் உலகமெங்கும் 167 கடைகளை 18 நாடுகளில் நடத்தி வருகிறது. ஹெம்லெஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கியதன் மூலம் பொம்மை மற்றும் நுகர்வோர் பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உலக கோடிஸ்வரர்களில் ஒருவராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி திகழ்ந்து வருகிறார். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தடம் பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.