Published on 14/09/2018 | Edited on 14/09/2018
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமராக பதவியேற்று இதுவரையில் இரண்டு முறை ராணுவ தலைமையகத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று ஐஎஸ்ஐ தலைமையகத்துக்கும் சென்றுள்ளார். பின்னர், இதுகுறித்து ஐஎஸ்ஐ அளித்த அறிக்கையில்,” ‘‘நாட்டின் பாதுகாப்பிலும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கையிலும் உளவுத்துறையின் பங்கை பிரதமர் இம்ரான்கான் பாராட்டினார். நாட்டின் பாதுகாப்பில் முன்னணி வகிக்கும் ஐஎஸ்ஐ, உலகின் மிகச் சிறந்த அமைப்பாக செயல்படுகிறது எனவும் அவர் கூறினார்’’ என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் போட்டியிட்ட போதே அவருக்கு ராணுவ பின்புலம் இருக்கிறது, அவர்கள்தான் அவரை வெற்றிபெற செய்தனர் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.