Published on 30/10/2020 | Edited on 30/10/2020
துருக்கியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துருக்கியில் கடல் பகுதியில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி ஏற்பட்டது. துருக்கியின் பல பகுதியில் 20க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. போர்னோவா,பைராக்சி ஆகிய நகரங்களிலும் ஏராளமான கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ள கட்டட இடிபாடுகளுக்குள் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.