அரியவகை ஆமைகளை பாதுகாக்க பெரு நாடு முடிவு
பெரு நாட்டில் அரியவகை ஆமைகளை பாதுக்காக்க அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐந்தாயிரம் ஆமை குஞ்சுகள் அமேசான் காடுகளில் விடப்பட்டன.
முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால் தரிசாய வகை ஆமைகள் அழிவின் விளம்பில் இருக்கின்றன. இதனை தொடர்ந்து தரிசாய வகை ஆமைகளை பராமரிக்க பெரு நாட்டு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வனத்துறையால் சேகரிக்கப்பட்ட தரிசாய ஆமைகளின் முட்டைகள், செயற்கையாக பொரிக்கப்பட்டு ஆமைக் குஞ்சுகளான பின்னர் அமேசான் காடுகளில் உள்ள நதிகளில் விடப்பட்டுள்ளன.
வனத்துறையின் இந்த முயற்சியால் அழிந்துவரும் தரிசாய ஆமைகள் பாதுகாக்கப்படுவதுடன், அப்பகுதி சுற்றுலாத்தளமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.