சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 34 பேர் பலி!
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்யா இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிரியாவில் ரஷ்யாவின் விமான படை தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், சிரியாவின் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை தாக்குதலை நடத்தியது. ஆனால், இந்த தாக்குதலில் பொதுமக்கள் படுகொலைக்கு ஆளாகினர். இதில் 9 குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள ஆற்றில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.