அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா எச்சரிக்கை
அமெரிக்காவின் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கா – வட கொரியா நாடுகளிடையே கருத்து மோதல்கள் வழுத்து வருகின்றன. இந்நிலையில் மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெருப்புடன் விளையாட வேண்டாம் என தெருவித்தார். இதற்கு பதிலளித்துள்ள வட கொரியா, அமெரிக்காவின் குவாம் தீவு அருகே உள்ள ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் அறிவித்துள்ளது.