Published on 04/03/2019 | Edited on 04/03/2019
புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது. இந்த சண்டையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இந்தியாவின் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்து வந்தது. இந்நிலையில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள மரங்கள் ஏராளமாக அழிந்துவிட்டன. பாகிஸ்தானின் இயற்கையை அழித்து இந்தியா சுற்றுசூழலுக்கு எதிரான தீவிரவாதத்தை மேற்கொண்டுள்ளது என ஐ.நா சபையில் பாகிஸ்தான் புகார் ஒன்றை அளித்துள்ளது.